Monday, December 14, 2009

சில கவிதைகள்

ஊஞ்சல்

சிறுமியொருத்தி
தோட்டத்து ஊஞ்ச‌லில்
அப்படியும் இப்படியும்
ஆடிக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்குள்ளிருந்து
அம்மா அழைக்க‌
ஊஞ்சலை விட்டிறங்கி
அவசர அவசரமாக‌
உள்ளே ஓடினாள்.

கொஞ்சம் சோகமாக‌
தனியே ஆடிக்கொண்டிருந்தது
ஊஞ்சல்…..
0
தம்பதி
“நீ தான் நான் காதலித்த‌
முதல் பெண்”
“எனக்கும் நீங்க தான்”
அன்னோன்யமாக‌
பேசிக் கொண்டிருந்தனர்
க‌ட‌ற்க‌ரையில் ஒரு த‌ம்ப‌தி.
இதையும் சேர்த்தே சொன்னார்க‌ள்.
க‌ரையைச் சேரும் அலைக‌ள்
மொத்த‌ம் இர‌ண்டு.
க‌ட‌லின் ந‌டுவில் இற‌க்கும்
அலைக‌ள் எங்கள் க‌ண‌க்கில் இல்லை.
0

மிருகம்

அவன் வெளிக்காட்டுவதெல்லாம்
கோபம்,துரோகம்,பொறாமை
இவை மட்டுமே.

நான் வெளிக்காட்டுவதெல்லாம்
புன்சிரிப்பு,பணிவு,அடக்கம்
இவை மட்டுமே..

..மேலும் நாங்கள் இருவரும் ஒருவரே